தமிழகத்தில் 3 இடங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 3 சதுப்பு நிலங்களை ‘ராம்சர்’ இடங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் 5 சதுப்பு நிலங்கள் “ராம்சர்” இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தின் கரிக்கிளி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரனை சதுப்பு நிலக்காடு, பிச்சாவரம் சதுப்ப நிலக்காடு ஆகியவை ராம்சர் எனப்படும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிசோரமில் பாலா சதுப்பு நிலம், மத்தியப் பிரதேசத்தில் சாக்கிய சாகர் சதுப்புநிலம் ஆகியவை இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து இந்தியாவில் உள்ள ராம்சர் இடங்களின் எண்ணிக்கை 49-லிருந்து 54 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள முன்முயற்சி சதுப்பு நிலங்களை இந்தியா எவ்வாறு பராமரித்து முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதைக் காட்டும். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் அங்கீகாரம் பெற்ற மேலும் 5 இந்திய சதுப்பு நிலங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.


— Bhupender Yadav (@byadavbjp) July 26, 2022

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.