உணவகம் ஒன்றில் தன் நண்பருடன் உணவருந்திக்கொண்டிருந்த சுவிஸ் நாட்டு சுற்றுலாப்பயணி ஒருவரிடம், துப்பாக்கியைக் காட்டி அவரது கைக்கடிகாரத்தைப் பறித்துச் சென்றார் ஒரு மர்ம நபர்.
கைக்கடிகாரத்தைப் பறிகொடுத்தவர் திகைத்துப்போய் அமர்ந்திருக்க, சிறிது நேரத்தில் மற்றொருவர் வந்து திருடிச் செல்லப்பட்ட அதே கைக்கடிகாரத்தை அவரிடமே கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
இந்த விடயங்கள் அனைத்தும் அந்த உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவம் இத்தாலியிலுள்ள Trento என்ற நகரில் நடைபெற்றுள்ளது.
விடயம் என்னவென்றால், அந்த சுவிஸ் நாட்டவர் அணிந்திருந்தது, விலையுயர்ந்த Richard Mille நிறுவன ஆடம்பர சுவிஸ் கைக்கடிகாரம் என நினைத்து அந்த நபர் அந்த கைக்கடிகாரத்தை துப்பாக்கி முனையில் பறித்துச் சென்றுள்ளார்.
ஆனால், அவர் அதை விற்க முயலும்போது, அது Richard Mille நிறுவன கைக்கடிகாரம் அல்ல, அது ஒரு போலி கைக்கடிகாரம் என்பது தெரியவந்துள்ளது.
எனவே, உடனடியாக, சரியாகச் சொன்னால், ஏழு நிமிடங்களில் அந்த கைக்கடிகாரத்தை திருடியவரிடமே சேர்த்துவிட்டார் அந்த கைக்கடிகாரத்தைப் பறித்துச் சென்றவர்.
உண்மையான Richard Mille நிறுவன கைக்கடிகாரங்கள், 300,000 யூரோக்கள் வரை மதிப்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.