டெல்லி: சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி பேரணியாக ஜனாதிபதி மாளிகை சென்றனர். விஜய்சவுக் பகுதியில் தர்ணா செய்த அவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2வது நாளாக இன்று சோனியாகாந்தி ஆஜராகி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான நாடாளுமன்றத்தில் அமளி செய்து முடக்கிய எதிர்க்கட்சி யினர். தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரை பேரணியில் நடத்தினர்.
அப்போது, மத்தியஅரசு, புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். தொடர்ந்து சென்ற பேரணி, விஜய் சவுக்கில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றனர். அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு கொடுக்கச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், விஜய் சவுக் பகுதியில் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற போலீசார் முயற்சி செய்தனர். அப்போது, போலீசாருக்கும் எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.