பிரிட்டனில் பிரதமர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் நடந்த தொலைக்காட்சியில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது .
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியில் இருந்து விலகினார். ஆளும் பழைமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக பதவியேற்பார். இந்நிலையில் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.
ரிஷி சுனாக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் இறுதிப் போட்டியில் உள்ளனர். பொருளாதார கொள்கைகள் மற்றும் வரி திட்டங்கள் தொடர்பாக இருவருக்கும் இடையே தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. காரசாரமாக நடந்த இந்த விவாதம் தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில், மிகச் சிறப்பாக வாதாடியதாக சுனாக்கு, 39 சதவீதம் பேரும், லிஸ் டிரசுக்கு 38 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.
எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, 47 சதவீதம் பேர் லிஸ் டிரசுக்கும், 38 சதவீதம் பேர் சுனாக்கும் ஆதரவு எண்ணிக்கை. இதனால், இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அடுத்த பிரதமர் யார் என்பதில் பிரிட்டன் மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.