லண்டன் : பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் நடந்த ‘டிவி’ விவாதத்திலும், இந்தியாவை பூர்வீகமாக உடைய முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழைமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக பதவிஏற்பார். அதையடுத்து கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.இதில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இறுதிப் போட்டியில் உள்ளனர். பொருளாதார கொள்கைகள் மற்றும் வரி திட்டங்கள் தொடர்பாக இருவருக்கும் இடையே ‘டிவி’ விவாதம் நடந்தது.
காரசாரமாக நடந்த இந்த விவாதம் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், மிகச் சிறப்பாக வாதாடியதாக சுனக்குக்கு, 39 சதவீதம் பேரும், லிஸ் டிரசுக்கு 38 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 47 சதவீதம் பேர் லிஸ் டிரசுக்கும், 38 சதவீதம் பேர் சுனக்குக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்., 2ம் தேதி நடக்கும் கட்சித் தேர்தலில் கட்சி நிர்வாகிகள் ஓட்டளித்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். செப்., 5ம் தேதி அதன் முடிவுகள் வெளியாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement