இந்திய மாநிலம் குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்த 28 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் போடாட், அகமதாபாத் நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது.
இதனை வாங்கி அருந்திய பலர், சில மணிநேரங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் ஒவ்வொருவராக உயிரிழந்துள்ளனர்.
உடனடியாக மது அருந்திய நபர்கள் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் 21 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து 7 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததால் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.
AP
இந்த நிலையில் சுமார் 30 பேர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்கப்பட்ட மதுவில் வேதிப்பொருள் கலக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் 28 கள்ளச்சாராயத்திற்கு பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.