மறைந்த தோழி உடன் லிப்லாக் கொடுத்த போட்டோவை பகிர்ந்து யாஷிகா உருக்கம்
'தி லெஜென்ட்' படத்தில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், அதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் ‛கடமையை செய்' என்ற படத்தில் நடித்துள்ளார். இது தவிர இன்னும் சில படங்களிலும் அவர் கமிட்டாகி உள்ளார். கார் விபத்துக்கு பிறகு மீண்டும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தனது தோழி ஒருவருக்கு லிப்லாக் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த தோழி வேறு யாரும் அல்ல யாஷிகா கார் விபத்தில் சிக்கியபோது அதில் அவருடன் பயணித்து இறந்த வள்ளிசெட்டி பவானி தான். அவரின் நினைவுகளை குறிப்பிட்டு இந்த போட்டோவை வெளியிட்டுள்ள யாஷிகா, ‛‛எங்களின் முழுமையற்ற கதை. மிஸ் யூ. எப்போது என் பிரார்த்தனைகளிலும், எண்ணங்களிலும், நினைவுகளிலும் நீ தான். எல்லாமும் புன்னகையுடன் முடிந்த இரவு '' என குறிப்பிட்டுள்ளார்.