மிடில் கிளாஸ் மக்களுக்கு அடுத்த நெருக்கடி.. கழுத்தை நெரிக்கும் விலைவாசி பிரச்சனை..!

இந்திய மிடில் கிளாஸ் மக்கள் ஏற்கனவே உணவு பொருட்கள் விலைவாசி உயர்வால் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் தற்போது மருந்து மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

இது நடுத்தரக் குடும்பங்களின் பர்ஸ்-ஐ ஓட்டையாக்கும் முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. குறிப்பாகக் கொரோனா, MonkeyPox போன்ற தொற்றுப் பாதிப்புகள் அதிகரித்து வரும் வேளையில் மக்கள் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மருந்து மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகள் அதிகரிக்க என்ன காரணம்..?

ஐடி ஊழியர்களின் சராசரி சம்பளம் சரிவு.. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ என்ன செய்கிறது..?!

உணவு, மருத்துவப் பொருட்கள்

உணவு, மருத்துவப் பொருட்கள்

இந்திய குடும்பங்களை ஏற்கனவே உணவு பொருட்கள், எரிபொருள், எரிவாயு விலை உயர்வால் அதிகளவிலான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மருத்துவச் சிகிச்சையில் சேவைப்படும் மருத்துவ உபகரணம், மருந்துகள் ஆகியவை மட்டும் அல்லாமல் சமீபத்தில் மத்திய அரசின் மருத்துவமனையில் அறையின் கட்டணத்தில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி உட்பட அனைத்தும் விலை உயர உள்ளது.

ஆய்வு

ஆய்வு

சமீபத்தில் லோக்கல்சர்க்கிள்ஸ் அமைப்ப நடத்திய ஒரு ஆய்வில் 52 சதவீதம் பேர் ரூபாய் மதிப்பின் சரிவால் உணவு, மருந்து பொருட்கள், மருத்துவச் செலவுகள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாகவும், இதனால் செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரூபாய் மதிப்பு
 

ரூபாய் மதிப்பு

இந்திய மருத்துவத் துறை அதிகளவில் வெளிநாட்டு மருத்துவ உபகரணங்கள் நம்பி இயங்கி வரும் காரணத்தால் தற்போது ரூபாய் மதிப்பின் சரிவு காரணமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. இது நேரடியாக மக்கள் தலையில் தான் விழுகிறது.

பார்மா ஏற்றுமதி - இறக்குமதி

பார்மா ஏற்றுமதி – இறக்குமதி

இந்திய பார்மா துறையின் ஏற்றுமதி 2014-22 ஆம் ஆண்டுகள் மத்தியில் 11.6 பில்லியன் டாலரில் இருந்து 103 சதவீதம் அதிகரித்து 24.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதேவேளையில் இறக்குமதி அளவு 2020-21ல் 44,708 கோடி ரூபாயில் இருந்து 2021-22 ஆம் நிதியாண்டில் 41 சதவீதம் அதிகரித்து 63,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மருந்து பொருட்கள் உற்பத்தி

மருந்து பொருட்கள் உற்பத்தி

இதேவேளையில் மருந்து பொருட்கள் உற்பத்திக்குத் தேவையான பெரும்பாலான ஆக்டிவ் பார்மாகியூட்டிகல் இன்கிரிடியென்ட்ஸ், உற்பத்தி பொருட்கள் மற்றும் மருத்துவமனை உபகரணங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அமெரிக்க டாலரில் பேமெண்ட் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மருந்து மற்றும் மருத்துவத் துறையும் பாதிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

After food, healthcare expenses are big trouble for middle class people

After food, healthcare expenses are big trouble for middle class people மிடில் கிளாஸ் மக்களுக்கு அடுத்த நெருக்கடி.. கழுத்தை நெரிக்கும் விலைவாசி பிரச்சனை..!

Story first published: Tuesday, July 26, 2022, 14:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.