ரயில் தடம் புரண்டதால் மும்பையில் புறநகர் ரயில் சேவை கடும் பாதிப்பு| Dinamalar

மும்பை :மும்பையில் ரயில் தடம் புரண்டதால் புறநகர் ரயில் சேவை இரண்டரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.மஹாராஷ்டிராவின் மும்பையிலிருக்கும் சத்ரபதி சிவாஜி மஹராஜ் ரயில் நிலையத்தில் இன்று ஒரு ரயில் தடம் புரண்டது. இதனால், ரயில்களை இயக்க முடியாமல் போனது. ரயில்வே பொறியாளர்கள், மதியம் 12:15 மணிக்கு, தடம் புரண்ட ரயிலை சீரமைத்தனர்.


இதனால், புறநகர் ரயில் தடங்களில் இரண்டரை மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மும்பை மாநகர போக்குவரத்தில் உயிர் நாடியாக திகழ்வது புறநகர் ரயில்கள் தான். தினமும் ‘ஹார்பர் லைனில்’ 10 லட்சம் பேரும், ‘மெயின் லைனில்’ 30 லட்சம் பேரும் பயணம் செய்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.