வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கான ஒத்திகையை நடந்து முடிந்துள்ள நிலையல், இன்று (ஜூலை 26) ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம் துவங்கியது. ஏலம் விடப்படும் 5ஜி அலைக்கற்றைகளின் மதிப்பு, 4.3 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
தொலைதொடர்புத்துறையை மேம்படுத்த 2023க்குள் 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 5ஜி சேவையை வழங்குவதற்காக பிரதமர் மோடி தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பாரதி ஏர்டெல் , ரிலையன்ஸ் ஜியோ , வோடாபோன் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுடன், அதானியின் நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பித்து இருந்தன. இதையடுத்து இன்று (ஜூலை 26) 5 ஜி அலைக்கற்றை ஏலம் துவங்கியது. முதற்கட்டமாக பெருநகரங்களான போபால், டில்லி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கான ஏலம் துவங்கியதாக தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
5ஜி சேவை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 2023 மார்ச் மாதத்திற்குள் 5ஜி சேவை முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும் எனக்கூறியுள்ளார். 5ஜி வேகத்தை பொறுத்த வரை, 4ஜியில் கிடைக்கும் வேகத்தை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement