Netflix எடுத்த அதிரடி முடிவு – இனி ஆப்பிள் ஐபோன் பயனர்கள் 30% வரி செலுத்த வேண்டாம்!

Netflix iOS App: நெட்பிளிக்ஸ் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. iOS பயனர்களுக்காக இந்த புதிய பதிப்பை நிறுவனம் கொண்டுவந்துள்ளது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட் மூலம், யாரேனும் சந்தாவை செலுத்த செயலியில் முனைந்தால், அவர்களை நேரடியாக Netflix இணையதளத்திற்கு கொண்டு செல்லும்.

முன்னதாக செயலியிலேயே அனைத்து விதமான சந்தாக்களையும் பெற முடியும். இதில் ஒரு பெரும் சிக்கல் இருந்தது. ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் பயனர்களிடத்தில், செயலியில் இருந்து வாங்கும் ஒவ்வொரு உள்ளீடுகளுக்கும் 30% விழுக்காடு வரி வசூலித்துவந்தது. இது சந்தா திட்டத்திற்கான விலையை கணிசமாக உயரச் செய்தது.

பயனர்களை இழந்து வரும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு பெரும் சிக்கலாக இருந்த இந்த வசூலுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனி பயனர்கள் நேரடியாக இணையதளத்தில் தங்கள் சந்தாக்களை பெறலாம்.

Telecom: செல்போன் பயனர்களுக்கு நல்ல செய்தி – 5G அலைக்கற்றை ஏலம் தொடங்கியது!

மாறும் நிறுவன கட்டண முறைகள்

Netflix மட்டுமல்ல, Spotify ஐஓஎஸ் பயனர்களுக்கு வெளிப்புற சந்தா விருப்பத்தையும் வழங்குகிறது. IOS க்கான Netflix பயன்பாட்டில் உள்ள சந்தா விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, நடத்தப்படும் பரிவர்த்தனைகளுக்கு Apple பொறுப்பேற்காது என்பதை ஒரு பாப்-அப் பயனர்களுக்கு தெரிவிக்கிறது.

செயலியானது பயனரை அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் இணைக்கிறது. முதல் செயல்முறைகள் அனைத்தும் செயலியிலே நடைபெறுகிறது. ஆனால், கட்டணம் செலுத்தி அதனை உறுதிசெய்வது மட்டும் இணையதளம் வாயிலாக நடக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து செய்திகளில் இருந்துவருகிறது. இதற்கு, காரணம் நிறுவனம் கையாளும் பரிவர்த்தனை யுக்திகள் என்று கூறப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பல குற்றச்சாட்டுகளை நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.

மேலும், தனக்கென உள்ள பிரத்யேக பண வேலட்டுகளை பயன்படுத்த ஊக்குவிக்கும் முறைக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றிய அலுவலர்கள் நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இதுபோன்ற புகார்கள் எழுந்தது.

பயனர்களை அவர்களுக்கு தேவையான செயலிகளை பயன்படுத்த அனுமதிக்காதது பெரும் குற்றம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல தான் செயலிகளில் இருந்து வாங்கும் எந்த உள்ளடக்கங்களுக்கும் பயனர்கள் 30% விழுக்காடு வரை கட்டணம் செலுத்த வேண்டும் என நிறுவனம் கூறுகிறது.

SBI WhatsApp Banking: இனி எல்லாமே ஈஸி தான்; எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் அறிமுகம்!

புதிய திருத்தங்கள்

தென் கொரிய ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள டெவலப்பர்கள் இனி நிறுவனத்தின் சொந்த ஆப்-பேமெண்ட் முறையைப் பயன்படுத்தத் தேவையில்லை என்று கூறப்பட்டிருந்தது.

அதற்கு பதிலாக, ஆப்பிளின் முன்-அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மூலம் டெவலப்பர்கள் பணம் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இதன் காரணமாகவே, நெட்பிளிக்ஸ் தனது போக்கை மாற்றி அமைத்துள்ளது.

மேலதிக செய்தி: Flipkart Offers: சிறந்த ஆஃபர்களுடன் டாப் 10 பட்டியலில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள்!

இந்த புதுப்பிப்பு தென் கொரியாவில் 2021 தொலைத்தொடர்பு வணிகச் சட்டத்தின் திருத்தத்தைத் தொடர்ந்து, ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற பெரிய இயங்குதள டெவலப்பர்கள் தங்களின் கட்டண முறைகளை மட்டும் பயன்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதைத் தடைசெய்தது.

கூகுள், ஆப்பிள் ஆகிய இரு நிறுவனங்களும் இந்த சட்டத்தை எதிர்த்தன. பயனர் தகவல்கள் மூன்றாம் தரப்பினரிடத்தில் பகிர்வது பாதுகாப்பாக இருக்காது என்று தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.