Realme Pad X price: ரியல்மி நிறுவனம் புதிய கேட்ஜெட்டுகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்துவருகிறது. சமீபத்தில் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுடன் புதிய பட்ஜெட் டேப்லெட்டுகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த சூழலில், சீனாவில் வெளியிடப்பட்ட ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மொத்தம் மூன்று நிறங்களில் ரியல்மி பேட் எக்ஸ் வெளியாகியுள்ளது. ஒப்போ பேட், ஒப்போ பேட் ஏர் போன்ற வடிவமைப்பில் ரியல்மி பேட் இருக்கிறது. ஸ்னாப்டிராகன் புராசஸர், 2K டிஸ்ப்ளே போன்ற சிறப்பம்சங்கள் புதிய ரியல்மி டேப்லெட்டில் உள்ளன.
Telecom: ரூ.200க்கும் குறைவான ஏர்டெல் ரீசார்ஜ்கள் திட்டங்கள்!
ரியல்மி பேட் எக்ஸ் விலை விவரங்கள் (Realme Pad X Price in India)
ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட் விலை ரூ.19,999 முதல் தொடங்குகிறது. இந்த விலைக்கு வைஃபை அம்சமுடன் வரும் 4ஜிபி + 64ஜிபி வேரியன்ட் கிடைக்கும். பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் ஆகஸ்ட் 1 முதல் இந்த டேப்லெட் விற்பனைக்கு வருகிறது.
மேலதிக செய்தி:
SBI WhatsApp Banking: இனி எல்லாமே ஈஸி தான்; எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் அறிமுகம்!
முறையே ரியல்மி டேப் எக்ஸ் 5ஜி வைஃபை + செல்லுலார் மாடலின் 4ஜிபி + 64ஜிபி வேரியன்ட் விலை ரூ.25,999 ஆகவும், 6ஜிபி+128ஜிபி வேரியன்ட் விலை ரூ.27,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி பேட் எக்ஸ் அம்சங்கள் (Realme Pad X Specifications)
இந்த டேப்லெட் கணினி 10.95″ அங்குல பெரிய QHD 2K எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. ரியல்மி பேட் எக்ஸ் உடன் ஸ்டைலஸ் வழங்கப்படும். இது பயனர்களுக்கு பல வேலைகளை எளிதில் மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் இதில் நிறுவப்பட்டுள்ளது. வைஃபை மற்றும் செல்லுலார் என வேரியன்டுகள் பிரித்து வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட்டின் தடிமன் வெறும் 7.1mm தான்.
மேலதிக செய்தி:
5G Auction: செல்போன் பயனர்களுக்கு நல்ல செய்தி – 5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது!
பின்பக்கம் 13 மெகாபிக்சல் கேமராவும், 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இதில் இருக்கும். கீழ்பக்கம் ஸ்பீக்கர் கிரில்ஸ் உடன், டேட்டா மற்றும் சார்ஜிங்கிற்காக USB டைப்-சி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிம் கார்ட் டிரே இடதுபக்கம் கொடுக்கப்படுகிறது.
இந்த பெரிய டிஸ்ப்ளே டேப்லெட்டை சக்தியூட்ட 8,360mAh பேட்டரி கொடுக்கப்படும். இதனை ஊக்குவிக்க 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் பயனர்களுக்குக் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் டேப்லெட்டில் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.