வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாருதி சுஸுகி நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஆல்டோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தொடக்க நிலை ஹேட்ச்பேக் மாடல் புதிய பிளாட்ஃபாரம் மற்றும் புதிய பவர்டிரெய்ன் பெறும். மாருதி சுஸுகி தனது ஃபிளாக்ஷிப் எஸ்யூவியான புதிய கிராண்ட் விட்டாரா செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது. எனவே, அதற்கு பிறகு ஆல்டோ விற்பனை துவங்கலாம்.
Maruti Suzuki Alto
வரவிருக்கும் மூன்றாம் தலைமுறை ஆல்டோ காரை மாருதி சுசூகியின் மாடுலர் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பாக இந்நிறுவனத்தின் பல மாடல்கள் வடிவமைக்கப்பட்ட பிளாட்பாரம் ஆகும். ஹார்டெக்ட் இயங்குதளம் எஸ் பிரெஸ்ஸோ, செலிரியோ, வேகன் ஆர், எர்டிகா மற்றும் XL6 கார்கள் கிடைக்கிறது.
ஆல்டோ பெரும்பாலும் இரண்டு பவர்டிரெய்ன் விருப்பங்களைப் பெறும் – தற்போதுள்ள 796cc பெட்ரோல் எஞ்சின் மற்றும் புதிய K10C 1.0-லிட்டர் டூயல் ஜெட் யூனிட், சமீபத்தில் மாருதி சுசுகி எஸ் பிரஸ்ஸோவில் வந்துள்ளது. 799சிசி என்ஜின் 48hp மற்றும் 69Nm டார்க்கை உருவாக்குகிறது. அடுத்ததாக, புதிய K10C 67hp மற்றும் 89Nm உற்பத்தி செய்கிறது. வரவிருக்கும் ஆல்டோ CNG பதிப்புகளையும் பெறும்.
ரெனோ க்விட் காருக்கு சவால் விடுக்கும் வகையிலான முகப்பு தோற்றம் மற்றும் இன்டிரியர் மேம்பட்டதாக நவீன வசதிகளுடன் புதிய பாதுகாப்பு அம்ச விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டிருக்கும்.