2021-ல் கார்ப்பரேட் உலகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பெண்களை மையமாகக் கொண்டு, ’கோட்டக் ப்ரைவேட் பேங்க்கிங் ஹுருன் (Kotak Private Banking Hurun)’ 2021க்கான இந்தியாவின் டாப் பணக்காரப் பெண்கள் (Richest self -made woman) பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள தனது மூன்றாவது பதிப்பில், இரண்டாவது முறையாக இடம்பெற்று தன்னுடைய இடத்தை தக்க வைத்துள்ளார் ஹெச்.சி.எல் டெக்னாலஜி தலைமை பொறுப்பில் இருக்கும் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா. இவரின் சொத்து மதிப்பு முறையே 84,330 கோடி என தெரிவிக்கப்படுகிறது.
நைகா (Nykaa) நிறுவனத்தின் ஃபால்குனி நாயர், பயோகான் நிறுவனத்தின் கிரண் மஸும்தாரை முந்தி, 57,520 கோடி சொத்துகளுடன் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு பதிப்பில் பெண்களின் சராசரி சொத்து மதிப்பு 2,725 கோடியாக இருந்த நிலையில், இந்த 2021-ம் பதிப்பில் சுமார் 4,170 கோடியாக அது உயர்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட 20-ல் 9 பெண்கள் 40 வயதுக்கும் குறைவானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.