ஈரோட்டில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக இரு இளைஞர்களை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாணிக்கம்பாளையம் உள்பட இருவேறு பகுதிகளில் இருந்து இரண்டு இளைஞர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இவர்களை புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை, சேலம் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு அதிகாரிகள் அவர்கள் தங்கியிருந்த வீடுகளுக்குள் நுழைந்து அதிரடியாக இருவரை மடக்கிப் பிடித்து அழைத்துச் சென்றனர். மேலும் பிடிபட்டவர்கள் தங்கியிருந்த வீடுகளில் மாவட்ட போலீசார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இன்னும் 20 நாட்களில் நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இச்சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM