தங்கம் விலையானது கடந்த மார்ச் மாதத்தில் 2000 டாலர்களை தொட்ட பிறகு, தற்போது 1720 டாலர் என்ற லெவலில் காணப்படுகிறது. இதே இந்திய கமாடிட்டி சந்தையில் 10 கிராமுக்கு 50,522 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
வெள்ளி விலையும் கிலோவுக்கு 54,865 ரூபாய் என்ற லெவலில் சரிவினைக் கண்டு காணப்படுகின்றது.
டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தையின் ஏற்றம் காரணமாக தங்கம் விலையானது, பெரியளவில் ஏற்றம் காணமல் தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது.
ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம்
இந்த வாரம் முதலீட்டாளர்கள் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தின் முடிவினை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இதனால் பெரியளவிலான முதலீடுகள் தங்கத்தில் குறைந்துள்ளது. இதுவே தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இன்று முடிவடையவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் பிரச்சனையால் ஏற்றம்
உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் கடந்த மாரச் மாதம் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2000 டாலர்களை தாண்டியது. இந்த நிலையில் அந்த லெவலில் இருந்து பார்க்கும்போது போது கிட்டதட்ட 250 டாலர்கள் குறைந்துள்ளது. இது சுமார் 12% ஆகும்.
ரூ.5000 சரிவா?
இது ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை குறைத்த நிலையில் வந்துள்ளது. இதே இந்திய சந்தையில் 55,200 ரூபாய் என்ற லெவலையும் எட்டியது. அந்த லெவலில் இருந்து பார்க்கும்போது 10 கிராமுக்கு 5000 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது.
பொருளாதாரத்தில் தாக்கமா?
தொடர்ந்து சமீபத்திய வாரங்களாகவே டாலரின் மதிப்பு ஏற்றம் மற்றும் பத்திர சந்தை ஏற்றம் என பல காரணிகளுக்கு மத்தியில், தங்கம் விலையானது தொடர்ந்து தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் இன்று வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையில் தாக்கமா?
தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அழுத்தத்தில் இருந்தாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் தங்கத்தின் தேவையானது குறையலாம் என்றும் எதிரார்க்கப்படுகிறது. குறிப்பாக தங்கத்தின் முக்கிய நுகர்வோரான சீனா மற்றும் இந்தியாவில் தேவை குறையலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. எப்படியிருப்பினும் அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
வட்டியில்லா முதலீடு
அமெரிக்காவினை தொடர்ந்து மற்ற நாடுகளும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர மற்ற நாடுகள் முயற்சி எடுக்கலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1715.20 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதேபோல வெள்ளி விலையும் சற்று குறைந்து, 18.492 டாலராக காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே குறைந்துள்ள நிலையில், இது மத்திய வங்கியின் முடிவை பொறுத்து பெரியளவில் மாற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
gold price on 27th June 2022: Gold prices fell by Rs 5000 per 10 grams from the recent high
gold price on 27th June 2022: Gold prices fell by Rs 5000 per 10 grams from the recent high/உச்சத்தில் இருந்து ரூ.5000 சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு நாட்களில் தெரியுமா.. இனி குறையுமா?