இந்தியாவின் முன்னணி அழகு சாதன பொருட்கள் விற்பனை தளமான நைகா நிறுவனர் பால்குனி நாயர் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 963 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியா டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நிலையில், தற்போது நிதி தேவைக்காகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற வேண்டும் என்பதற்காகவும் ஐபிஓ வெளியிட்டு வருகிறது.
அப்படி ஐபிஓ வெளியிட்ட நைகா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாகத் தலைவர் பால்குனி நாயர் சொத்து மதிப்பு ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவில் இருந்து எப்போதும் விலகியதே இல்லை.. கெளதம் அதானி பெருமிதம்..!
பால்குனி நாயர்
நைகா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பால்குனி நாயர்-ன் சொத்து மதிப்புத் தடாலடியாக வளர்ச்சி அடைந்துள்ள வேளையில் பயோகான் நிறுவனர் மற்றும் CEO கிரண் மஜும்தார்-ஷா சொத்து மதிப்பில் முன்னேறி இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆகியுள்ளார்.
கோடக் பிரைவேட் பேங்க் மற்றும் ஹுரூன்
கோடக் பிரைவேட் பேங்க் மற்றும் ஹுரூன் வெளியிட்ட இந்தியாவின் முன்னணி பணக்கார பெண்கள் பட்டியல் 2021 வெளியிட்டு உள்ளது. இப்பட்டியலில் முதல் இடத்தை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷினி நாடார் முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில் 2வது இடத்தை 57,520 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 2வது இடத்தையும், 3வது இடத்தில் 29,030 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் கிரண் மஜும்தார்-ஷா உள்ளார்.
ரோஷினி நாடார்
இப்பட்டியலில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா 84,330 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாவது முறையாக இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ரோஷினி நாடார் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 54 சதவீதம் அதிகரித்துள்ளது.
டாப் 10
இவர்களைத் தொடர்ந்து Divi’s லேப்ஸ் நிலிமா மோடபார்ட்டி 28,180 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் ZOHO ராதா வேம்பு 26,260 கோடி ரூபாய், USV நிறுவனத்தின் லீனா காந்தி திவாரி 24,280 கோடி ரூபாய், தெராமேக்ஸ் அனு அகா மற்றும் மெஹிர் 14,350 கோடி ரூபாய், confluent நேகா 13,380 கோடி ரூபாய், லால் பாத்லேப்ஸ் வந்தனா லால் 6180 கோடி ரூபாய், ஹூரோ பின்கார்ப் ரேனு முன்ஜால் 6,620 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ளனர்.
9 பேர்
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 20 பேரில் 40 வயதுக்குக் கீழ் சுமார் 9 பேர் உள்ளனர். இதில் 9 பேருமே self-made Billionaries ஆகத் திகழ்கின்றனர்.
Nykaa’s Falguni Nayar Wealth surges 963 percent; Beats Biocon O Kiran Mazumdar-Shaw
Nykaa’s Falguni Nayar Wealth surges 963 percent; Beats Biocon O Kiran Mazumdar-Shaw ஒரு வருடத்தில் 963% வளர்ச்சி.. மாஸ் காட்டும் பால்குனி நாயர்..!