தமிழக அரசு மே, ஜூன் ஆகிய 2 மாதங்களில் தனியாரிடம் இருந்து 4,600 கோடி ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்கி அதில், 4 சதவிகித கமிஷனாக 220 கோடி ரூபாயை பெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டினார்.
தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் கரூரில் இன்று கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசும்போது…
மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த கடிதம் எழுதியுள்ளதாக செந்தில்பாலாஜி கூறுகிறார். அந்த கடிதத்தை அவர் காட்ட வேண்டும். கருணாநிதியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு செந்தில்பாலாஜி ஊழல் செய்கிறார்.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் 20 சதவிகித கமிஷன் பெறுகிறார்கள். தமிழகத்தில் அதிகம் பொய் சொல்லக் கூடிய அமைச்சராக செந்தில்பாலாஜி உள்ளார். தமிழகத்தில் மின் உற்பத்தி திறனை குறைத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி கமிஷன் பெறுகிறார்கள்.
மே, ஜூன் ஆகிய 2 மாதங்களில் 4,600 கோடிக்கு தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி 4 சதவிகித கமிஷன் ரூ.220 கோடியை பெற்றிருக்கிறார்கள. 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 54 சதவிகிதம் கட்டணம் உயருகிறது.
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஒவ்வொரு மாதமும் ஒரு பொய் சொல்கிறார். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 492 கோடிக்கு தமிழகத்தில் நிலக்கரி வாங்கப்பட்டுள்ளது. பணத்தை வைத்து ஜனநாயகத்தை விலை பேசும் அரசியல்வாதி தமிழகத்தில் இருக்கக் கூடாது. அப்படி நடந்தால் தமிழகத்தில் ஏழைகளை அப்புறப்படுத்த முடியாது.
5 கட்சிக்கு சென்ற செந்தில்பாலாஜி 6-வது கட்சிக்கு செல்வதற்கு முன் ஊழல் வழக்கில் சிறை செல்லும் நிலை ஏற்படும் என பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM