மானடிக்குப்பத்தில் நடந்த மாநில அளவிலான கபாடி போட்டியில் பெரிய புறங்கனி கிராமத்தை சேர்ந்த கபாடி வீரன் விமல் ராஜ் ஆடுகளத்திலேயே உயிரிழந்தார்.
களத்தில் உயிரைவிட்ட மாவீரன் விமல் ராஜ் குடும்பத்தினருக்கு போட்டி நடத்திய ஊரான மானடிக்குப்பம் ஊர் பொது மக்கள் அனைவரும் ஒன்று கூடி ரூபாய் 3,00,000 நிதி திரட்டி பண உதவியாக வழங்கி உள்ளனர்.
இந்த மிகப்பெரிய உதவியினை செய்த அக்கிராம நல்உள்ளங்களுக்கு அனைவரும் நன்றி கூறி வருகிறார்கள். தமிழக அரசு தரப்பில் ரூபாய் மூன்று லட்சம் மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில், தங்கள் மண்ணில் உயிரை விட்ட வீரனுக்காக, அவனது குடும்பத்திற்காக மானடிக்குப்பம் முழுவதுமாக வசூல் செய்து, புறங்கணி கிராமத்தில் இருக்கும் விமல்ராஜ் வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார்.
இந்த செயல் அங்குள்ளவர்களை மனதளவில் விமல்ராஜின் மரண துக்கத்தையும் கடந்து நெகிழச்செய்தது.