பெங்களூரு, : குரங்கம்மை நோயை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் இரண்டு படுக்கைகளை ஒதுக்க, சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் குரங்கம்மை நோய் நான்கு பேருக்கு பரவி உள்ளது தெரியவந்துள்ளது. இதில் கேரளாவில் மட்டுமே மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்; நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.சுகாதார துறை அதிகாரிகள் நேற்று மாவட்ட அரசு மருத்துவமனை இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதில், புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் குரங்கம்மை நோயாளிகளுக்கு என தனியாக இரண்டு படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.பெங்களூரு சி.வி.ராமன் மருத்துவமனை, மல்லேஸ்வரம் கே.சி.ஜெனரல் மருத்துவமனையிலும் குரங்கம்மை சிறப்பு வார்டு, தனிமை மையம் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement