வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மெகபூபா முப்தி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் அமலாக்கத்துறையினர், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சில விதிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்படுவதற்கான ஆதாரங்கள் மற்றும் ஆதாரங்களை காட்டாமல், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கு தடையற்ற அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டது அரசியல்சாசனத்திற்கு விரோதமானதாகும் எனக்கூறியிருந்தார்.
அதேநேரத்தில் மத்திய அரசு, அரசியலமைப்பு சட்டத்தின் படி பணமோசடி தடுப்பு சட்டத்தின் விதிகளை நியாயப்படுத்தியது. பணமோசடி என்பது விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி ஆகியோர் மட்டும் பயன்படுத்தவில்லை. பயங்கரவாதிகளும் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதால், பணமோசடி நிதி அமைப்புகளுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி பணமோசடி தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை மத்திய அரசு ஆதரித்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று(ஜூலை 27) தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பணமோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்வது தன்னிச்சையான நடவடிக்கை அல்ல. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சோதனை செய்ய, கைது செய்ய, வழக்குப்பதிவு செய்ய, சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி உள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அமலாக்கத்துறை தகவல் அறிக்கையை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டியது இல்லை. இதுவும் எப்ஐஆர்- ம் ஒன் அல்ல. 2002க்கு முன் நடந்த முறைகேட்டு புகார்களில் அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புசட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதி உண்டு. என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement