இந்திய பங்கு முதலீட்டாளர்களைப் போலவே வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அதிகளவில் டெக் நிறுவனங்களை நம்பி முதலீடு செய்து வந்த நிலையில் ஜூன் காலாண்டு முடிவுகள் டெக் முதலீட்டாளர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனால் டிசிஎஸ், இன்போசிஸ் முதல் கூகுள், மைக்ரோசாப்ட் வரையில் பல முன்னணி நிறுவனங்கள் ஜூன் காலாண்டில் மோசமான முதலீட்டை எதிர்கொண்டு உள்ளது. இதனால் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் வெளியிட்ட காலாண்டு முடிவுகள் மூலம் அனைத்து பங்குகளும் சரிவை எதிர்கொண்டது.
இந்த நிலையில் தான் கூகுள்-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட் மற்றும் மைக்ரோசாப்ட் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கூகுள்-க்கு போட்டியாக இண்ஸ்டாகிராம் புதிய சேவை.. மோனோபோலி உடைந்தது..!
கூகுள்
தமிழரான சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் ஆல்பபெட் நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் 62 சதவீத வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், தற்போது 13 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்தது உள்ளது. இதன் மூலம் ஜூன் காலாண்டில் 69.69 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.
ஆல்பபெட்
இதைத் தொடர்ந்து மொத்த வருவாயில் ஆல்பபெட் அதிகப்படியான வருமானத்தைப் பெறுவது விளம்பரத்தின் வாயிலாகத் தான், ஜூன் காலாண்டில் விளம்பர வருவாய் 12 சதவீதம் அதிகரித்து 56.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதோடு யூடியூப் விளம்பர வருவாயாக 7.34 பில்லியன் டாலர், கூகுள் கிளவுட் வருவாயாக 6.28 பில்லியன் டாலரை வருமானமாகப் பெற்றுள்ளது.
விளம்பர வருவாய் 69% உயர்வு
கூகுள் 2019ஆம் ஆண்டின் மார்ச் காலாண்டில் 30.6 பில்லியன் டாலரை வருமானமாக ஈட்டிய நிலையில், அதன் பின்பு அதிகப்படியாக 2021 டிசம்பர் காலாண்டில் 61.2 பில்லியன் டாலரை வருமானமாகப் பெற்று வரலாற்று உச்சத்தைப் பெற்றது. இதேபோல் 2021 ஜூன் காலாண்டில் ஆல்பபெட் நிறுவனத்தின் விளம்பர வருவாய் 69 சதவீதம் வரையில் உயர்ந்தது.
ஆல்பபெட் நிறுவன பங்குகள்
மேலும் கூகுள் நிறுவனத்திற்குப் புதிய வர்த்தகத்திற்கான முதலீடுகள் அதிகரித்தாலும், இக்காலாண்டில் இப்பிரிவில் இருந்து பெறப்படும் வர்த்தகம் 1.69 பில்லியன் டாலர் நஷ்டம் அடைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஆல்பபெட் நிறுவன பங்குகள் 2.32 சதவீதம் சரிந்து 105.02 டாலராக உள்ளது. இதேபோல் 2022ல் ஆல்பபெட் பங்குகள் 27.57 சதவீதம் சரிந்து ஒரு பங்கிற்கு 40 டாலர் வரையில் குறைந்துள்ளது.
மைக்ரோசாப்ட்
இந்தியரான சத்ய நாடெல்லா 2020க்கு பின்பு இந்த ஜூன் காலாண்டில் தான் 12 சதவீதம் என்ற குறைவான வளர்ச்சியைப் பதிவு செய்து 51.87 பில்லியன் டாலரை பெற்றுள்ளது. முதல் காலாண்டில் 49.25 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைத் தான் பெற்றது.
மைக்ரோசாப்ட் கிளவுட் சேவை
கூகுள் நிறுவனத்திற்கு எப்படி விளம்பரம் சேவை மூலம் அதிகப்படியான வருமானத்தைப் பெறுகிறதோ, அதேபோல் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கிளவுட் சேவை மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெறுகிறது. ஜூன் காலாண்டில் கிளவுட் சேவை மூலம் சுமார் 20.91 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியது.
Alphabet, Microsoft misses earnings, revenue estimates just like TCS, Infosys
Alphabet, Microsoft misses earnings, revenue estimates just like TCS, Infosys டிசிஎஸ், இன்போசிஸ் போலவே கூகுள், மைக்ரோசாப்ட்.. கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது..!