சின்னத்தரையில் முன்னணி சேனல்களுக்கு இணையான சீரியல் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் தற்போது புதிதாக இணந்துள்ள சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த வீடு அர்ச்சனா இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிறார். அவருடன் பிரனிகா தக்ஷூ, காயத்ரி யுவராஜ் ஆகியோர் நடித்து வரும் இநத சீரியலில் தற்போது மோக்ஷிதா பாய் இணைந்துள்ளார்.
கன்னடத்தில் வெளியான பாரு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான மோக்ஷிதா பாய் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். கன்னடத்தில் வெளியான புட்டகனா மக்களு என்ற சீரியலின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் மோக்ஷிதா பாய் நடித்து வருகிறார்.
இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், கன்னடாவில் வெளியான பாரு சீரியலில், இளகிய மனம் கொண்ட பெண்ணாக நடித்திருந்தேன். தொடர்ந்து அதே மாதிரியான கேரக்டரில் நடிக்காமல் அமை மாற்ற முயற்சித்தேன். அப்போதான் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் வாய்ப்பு கிடைத்தது.
கன்னடத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்திருந்த இந்த சீரியல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அதன் ரீமேக்கான தமிழில், நடிக்க ஆர்வமாக இருந்தேன். இதற்காக நான் பாரு சீரியலில் இருந்து விலகிவிடுவேன் என்று அர்த்தமல்ல. எனது முதல் முன்னிரிமை பாரு சீரியலுக்குத்தான் என்று கூறியுள்ளார்.
இந்த சீரில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் ஒரு சுயநலவாதியான சக்தி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருப்பதால், தமிழ் கற்றுக்கொள்வதில் எவ்வித சிரமமும் இல்லை. இந்த சீரியலில் அம்மாவாக நடிக்கும் மூத்த நடிகை அர்ச்சனாவுடன் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. நடிப்பு என்று வரும்போது அவர் அறிவுப் பொக்கிஷம்.” என்று கூறியுள்ளார். மோக்சிதாவின் கைவசம் மூன்று கன்னட படங்கள் உள்ளன.