செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை அனைத்து தரப்பு மக்களுக்கும் அறிந்து கொள்ளும் வகையில், மாவட்டம் தோறும் இந்த போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள மேம்பாலங்களுக்கு செஸ்பலகை வடிவில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நாகூர் தேசிய மேல்நிலைப்பள்ளி முதுகலை நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நாகூர்தேசிய மேல்நிலைப்பள்ளி முதுகலை வரலாற்றுஆசிரியர் திரு. முத்துக்குமார் சார் அவர்களால் உருவாக்கப்பட்ட மணல்சிற்பம். ஆசிரியர்முத்துக்குமார் அவர்களால் உருவாக்கப்பட்ட மணல் சிற்பம். pic.twitter.com/KRzu8tR508
— நீகா ஆரூர் 🙏 (@kalidoss_krish) July 27, 2022
இத்தகைய நிலையில், தற்போது இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நாகூர் தேசிய மேல்நிலைப்பள்ளி முதுகலை வரலாற்று ஆசிரியரான முத்துக்குமார் என்பவர் ஒரு மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.
மிகவும் தத்துரூபமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த சிலைக்கு அருகில், “நம்ம செஸ், நம்ம பெருமை.” என்று எழுதப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி தற்போது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.