நாடு முழுவதும் 26 தரமற்ற மருந்துகள் விற்பனை செய்வது தெரியவந்துள்ளதாக இந்திய மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஆயிரத்து 96 மருந்துகளை ஆய்வு செய்ததில் காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக கூறியுள்ள மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அதன் விவரங்களை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது.