பாஜக-விடம் பம்முகிறதா திமுக?

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, நாளை தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டி தொடக்க விழா நாளை மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக திமுக எம்.பி-க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்டவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை நேரில் சென்று வழங்கினார்கள். பிரதமரும் வர ஒப்புக்கொண்டார். இந்த நிலையில், அவரது சென்னை வருகையைப் பயன்படுத்தி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மோடியை பங்கேற்க வைக்க ஏற்பாடு செய்துவிட்டார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.
இது ஆளும் திமுக தரப்பை மிகுந்த கொதிப்புக்குள்ளாக்கியது. ஆனாலும், நாமே பிரதமரை அழைத்துவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாதே என கையைப் பிசைந்தபடியே அமைதியாகி விட்டது திமுக.
இந்த நிலையில், “பிரதமரின் வருகையையொட்டி சமூக வலைதளங்களில் பிரதமருக்கு எதிராக பதிவிடப்படும் கருத்துகள் கண்காணிக்கப்படும். பலூன்கள் பறக்க விடப்படவும் தடை விதிக்கப்படும் ” என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று அளித்த பேட்டியைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அரசை கிண்டலடித்து ஏராளமான பதிவுகள் போடப்படுகின்றன.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘ கோ பேக் மோடி’ என்றவர்கள், இப்போது ‘ வெல்கம் மோடி’ என பம்முவதாக அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கிண்டலடிக்கின்றனர். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ” ஆட்சியில் இல்லாதபோது `மோடி மோடி கோ… கோ’ என்று சொன்ன தி.மு.க, தற்போது, `மோடி மோடி கம் கம்…!’ என்று கூறுகிறது. இதுதான் தற்போது தி.மு.க-வின் ரைம்ஸ் ஆக இருக்கிறது” என ரொம்பவே கிண்டலடித்தார்.
இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறவில்லை எனக் கூறி, சென்னையின் பல இடங்களில் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரங்களில், பாஜக-வினர் மோடியின் படத்தை ஒட்டினர். “இது அரசு அரசு விளம்பரத்தை சேதப்படுத்திய குற்றமாகும் என்றும், ஆனாலும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும், இதையே பாஜக-வினர் அல்லாமல் வேறு யாராவது செய்தால் காவல்துறை விட்டு வைக்குமா?” என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், இதற்குப் பதிலடியாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள், பாஜக-வினர் ஒட்டிய மோடியின் புகைப்படத்தை மை பூசி அழித்தனர்.
” திமுக செய்யத் தவறியதைத்தான் நாங்கள் செய்துள்ளோம். திமுக-வினர் பயப்படலாம். நாங்கள் பயப்படத்தேவையில்லை…” எனக் கூறுகிறார்கள் பெரியார் திராவிடர் கழகத்தினர்.
கள்ளக்குறிச்சி விசாரணை: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிருப்தி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி, 12-ம் வகுப்பு பயின்றுவந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த மரணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்தின் குழுவினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான விசாரணையில் குறைபாடு இருப்பதாக தெரிகிறது எனத் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு தகவல்களையும் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க…
எடப்பாடியை இறுக்கும் ஊழல் வழக்கு… முழு பின்னணி!

கடந்த 2018-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு குற்றச்சாட்டை எழுப்பியது தி.மு.க. ‘தன் உறவினர்களுக்கு சாதகமாக நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை முறைகேடான வழிகளில் எடப்பாடி வழங்கிவிட்டார்’ என்பதுதான் தி.மு.க எழுப்பிய குற்றச்சாட்டு.
இது தொடர்பான வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவால் வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. எடப்பாடிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ள இந்த நெடுஞ்சாலை முறைகேடு வழக்கின் பின்னணி குறித்த விரிவான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க…
தலைமைக்குத் தகுதி இல்லாதவர்களா பெண்கள்? உயர் கல்வித்துறையில் பாலின சமத்துவமின்மை!

பெரும்பாலான நிறுவனங்களில் ஆண்களே தலைமைப் பொறுப்புகளில் இருப்பார்கள். விரல்விட்டு எண்ணும்படியான எண்ணிக்கையிலேயே பெண்கள் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள்.
‘படம் வரும்போது என் மீதுள்ள தவறான பார்வை நீங்கும்’ – ‘Dosa King’ குறித்து ஜீவஜோதி

ஜீவஜோதி, தன் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 18 வருடங்கள் சட்டப்போராட்டம் நடத்தி கொலைக்குக் காரணமான ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தவர். பரபரப்புகள் நிறைந்த அவரது வாழ்க்கை சம்பவம் ’Dosa king’ என்ற பெயரில் படமாககிறது. ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ. ஞானவேல் படத்தை இயக்குவதாக வெளியாகியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு, படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.
‘சின்னக் குயில்’ சித்ரா!: இளையராஜாவிடம் அறிமுகமானது எப்படி?

தமிழ்த்திரை இசையுலகில் குறுகிய காலத்தில் மிகப் பிரபலமாகிவிட்ட சித்ராவை திருவனந்தபுரம் நகரின் கிழக்குப் பகுதியான கரமனையில், ஜட்ஜ் ரோட்டின் இறுதியிலுள்ள அவருடைய எளிமையான வீட்டில் சந்தித்தோம்.
சிவப்பான வட்ட முகம், அதில் தவழும் புன்னகை, எளிமையான தோற்றம் – இவைதான் 22 வயது சித்ரா. நாம் சந்தித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
”கழிஞ்ச வருஷத்துச் சிறந்த பாடகியாக கேரள கவர்ன்மென்ட் என்னை செலக்ட் பண்ணியிருக்கு. காலையில பேப்பரைப் பார்த்து விஷயத்தைத் தெரிந்துகொண்டேன்” என்று பூரித்தார். சித்ரா முதன்முறையாக வாங்கப்போகும் பெரிய அவார்டு இதுதான்!
சித்ராவின் குடும்பம் அவர்கள் வசிக்கும் வீட்டைப் போலவே சின்னதுதான். அப்பா கிருஷ்ணன் திருவனந்தபுரம் பள்ளியன்றில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அம்மா சாந்தாவும் ஆசிரியை. அக்கா மீனா, கணவருடன் அமெரிக்காவில்! தம்பி மகேஷ், கல்லூரியில் படிக்கிறார். குடும்பமே இசையில் ஈடுபாடு உடையது. அப்பா ரேடியோவில் நிறைய இசை நிகழ்ச்சிகளும் அம்மா வீணைக் கச்சேரிகளும் நடத்தியிருக்கிறார்கள். அக்கா, கல்லூரியில் படிக்கும்போது லைட் மியூசிக் போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்.
தமிழகமே இவர் குரலுக்கு அடிமை… ஆனா சித்ராவோட பேச்சுல எவ்ளோ எளிமை..!
தமிழ்த்திரை இசையுலகில் குறுகிய காலத்தில் மிகப் பிரபலமாகிவிட்ட சித்ராவை திருவனந்தபுரம் நகரின் கிழக்குப் பகுதியான கரமனையில், ஜட்ஜ் ரோட்டின் இறுதியிலுள்ள அவருடைய எளிமையான வீட்டில் சந்தித்தோம்.
சிவப்பான வட்ட முகம், அதில் தவழும் புன்னகை, எளிமையான தோற்றம் – இவைதான் 22 வயது சித்ரா. நாம் சந்தித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! 16.3.1986 ல் விகடனில் வெளிவந்த ‘சின்னக் குயில்’ சித்ராவின் பேட்டியை முழுமையாக படிக்க க்ளிக் செய்யவும்…