பாடசாலை புதிய பஸ் சேவை

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்காக “பாடசாலை சேவை” என்ற பெயரில் புதிய தனியார் பஸ் சேவை ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி முதல் “பாடசாலை சேவை” பஸ்களின் பெயர்ப் பலகையில் குறித்த பாடசாலைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு தினமும் இரண்டு முறை இந்த புதிய பஸ் சேவை இடம் பெற உள்ளது.

எனவே, ஆசிரியர்களும், மாணவர்களும் இந்த பஸ் சேவைக்கு கட்டணம் செலுத்தி எவ்வித அசௌகரியமும் இன்றி இந்த போக்குவரத்து சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மாணவர்கள் எவ்வித அசோகரியமும் இன்றி பாடசாலைக்கு செல்வதற்கு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.