சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ள மாமல்லபுரத்தில் நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு செஸ் விளையாடினார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா நாளை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்தப் பணிகள் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து மாலை மாமல்லபுரத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கில் அமர்ந்து சிறிது நேரம் செஸ் விளையாடினார்.