மேற்குவங்கத்தின் புகழ் பெற்ற ஒரு ரூபாய் மருத்துவர் சுஷோவன் பந்தோபத்யாயா காலமானார்.
நிறைவாழ்வு வாழ்ந்து பலருக்கு தன்னலமற்ற அரிய மருத்துவ சேவை செய்து 84 வயதில் காலமான ஒரு ரூபாய் மருத்துவர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
பிரதமர் மோடி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் மருத்துவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.பத்மா விருது வழங்கிய போது அவரை சந்தித்துப் பேசியதை மோடி நினைவுகூர்ந்துள்ளார்.