Production Linked Incentive Scheme: ஒன்றிய அரசை நிர்வகிக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை டிஜிட்டல் மையமாக மாற்ற நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார். குறிப்பாக மின்னணு பொருள்களுக்கு மத்தியில் மொபைல் போன்களையும் இந்தியாவில் தயாரிக்க பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார்.
இதனை சரிசெய்வதற்காக பிரதமரால் உற்பத்திக்கு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் தற்போது நல்ல பலன் கிடைத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது PLI திட்டத்தினால், உள்நாட்டில் மொபைல் போன்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
மேலதிக செய்தி:
SBI WhatsApp Banking: இனி எல்லாமே ஈஸி தான்; எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் அறிமுகம்!
மொபைல் போன் உற்பத்தியில் வலுவான வளர்ச்சி
2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2021-22 நிதியாண்டில், உலகளாவிய செல்போன் உற்பத்தி 27.15 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேசமயம் 2021-22 நிதியாண்டில், 2020-21 நிதியாண்டை விட இந்தியாவில் மொபைல் போன்களின் உற்பத்தி 126.11 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மேலதிக செய்தி:
5G Auction: வேற யாருக்கும் இந்த தைரியம் வரல; உயர்தர சேவை வழங்க 700 Mhz Band-இல் கைவைக்கும் ஜியோ!
இதனுடன் மின்னணு பொருள்களின் ஏற்றுமதியிலும் இந்தியா லாபம் அடைந்து வருகிறது. மே மாதத்தில் மின்னணு பொருள்களின் ஏற்றுமதி 47.37 விழுக்காடும், ஜூன் மாதத்தில் 60.70 விழுக்காடும் அதிகரித்துள்ளது. பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 12 விழுக்காடும், மே மாதத்தில் 3.02 விழுக்காடும் அதிகரித்துள்ளது.
பிஎல்ஐ திட்டம் (PLA Scheme) விளக்கம்
மின்னணு சாதனங்களின் தயாரிப்புகளை ஊக்குவிக்க மார்ச் 2020-இல் பிஎல்ஐ திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் வாயிலாக மின்னணு உபகரணங்களை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள் ஊக்கத்தொகை பெறத் தொடங்கினர்.
மேலதிக செய்தி:
Realme Pad X 5G: புதிய ரியல்மி டேப்லெட் அறிமுகம் – அம்சங்கள் எல்லாம் டாப் டக்கர்!
இதுவரை இந்த தயாரிப்பாளர்களுக்கு ரூ.1781.02 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்காக 314 யூனிட்களை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டது. உள்நாட்டில் 271 யூனிட்கள் ரூ.31,416 கோடிகளை இதுவரை முதலீடு செய்துள்ளன என தரவுகள் தெளிவுபடுத்துகின்றன.