புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றதை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகையில் இருந்து புதிய பங்களாவுக்கு சென்றுள்ளார்.
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாகஇருந்த ராம் நாத் கோவிந்த்-ன் பதவி காலம் ஜூலை 25, 2022ல் முடிவடைந்த நிலையில். அவர் டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள பங்களாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
மாத ஓய்வூதியம், தனது இறுதிக்காலம் வரை டெல்லியில் உள்ள ஆடம்பர பங்களாவில் அவர் வசிக்கலாம் என்பதோடு, பற்பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பங்களா + மாத ஓய்வூதியம்
இந்த பங்களாவில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒன்றாக உள்ளது. இதில் அவரின் வாழ் நாள் முழுவதும் வசித்துக் கொள்ளலாம். இதனுடன் அவருக்கு மாதம் 2.5 லட்சம் ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும்.
மேலும் அவருக்கு ஒரு தனி செயலாளர், ஒரு கூடுதல் தனி செயலாளர், ஒரு தனி உதவியாளர், 2 பியூன்கள் ஆகியோர் ஒதுக்கப்படுவார்கள். அலுவலக செலவாக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
வேறு என்னென்ன சலுகைகள்?
இலவச மருத்துவ உதவியும், சிகிச்சையும் அளிக்கப்படும். விமானம், ரயில், கப்பல் ஆகியவற்றில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் உயர் வகுப்பில் பயணம் செய்யலாம்.
இது தவிர 2 தொலைபேசிகள், தேசிய ரோமிங் வசதியுடன் செல்போன், ஒரு கார் அல்லது கார் வைத்துக்கொள்வதற்கான படிகள் ஆகியவை வழங்கப்படும்.
மனைவிக்கும் சலுகைகள்
குடியரசு தலைவர் பதவியில் இருக்கும்போது இறந்து விட்டால் அல்லது ஓய்வூபெற்றால் அவருக்கு வாழ் நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். அவர் இறந்து விட்டால் அவரின் மனைவிக்கும் உரிமை உண்டு என சட்டம் உண்டு. மேலும் முன்னாள் ஜனாதிபதியும் அவரது மனைவியும் வாழ் நாள் முழுவதும் மருத்துவ சிகிச்சையை இலவசமாக பெற உரியுமையுண்டு.
ஜனாதிபதியின் மனைவிக்கு என்ன சலுகை
ஜனாதிபதியின் மனைவிக்கும் ஜனாதிபதி பெற்றதில் 50% ஓய்வூதியம் மற்றும் இறுதிகாலம் வரையில் மருத்துவ செலவுகள், தனி செயலாளர்,பியூன் ஒருவர், ஆகியோருடன் அலுவலக செலவாக ஆண்டுக்கு 20,000 ரூபாய் வரையிலும் கிடைக்கும். அதோடு ஒரு தொலைபேசி கார் ஆகியவையும், ஒரு நபரை துணைக்கு வைத்துக் கொண்டு, ஆண்டுக்கு 12 தடவை இந்தியாவில் உயர்வகுப்பு பயணமும் செய்யலாம்.
Do you know the pension benefits given to former President Ram Nath Kovind?
Do you know the pension benefits given to former President Ram Nath Kovind?/ராம்நாத் கோவிந்த்-க்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய சலுகைகள் என்னென்ன தெரியுமா?