வால்மார்ட் குடும்பத்தை பதம் பார்த்த அமெரிக்க மக்கள்.. ஒரே நாளில் ரூ.90,000 கோடி மாயம்..!

வால்மார்ட் அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனம் மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகளில் பல நிறுவனங்களைக் கைப்பற்றித் தனது வர்த்தகத் தடத்தை உலகம் முழுவதும் பதித்து உள்ளது.

இப்படி ரீடைல் சந்தை கட்டியாண்டு வரும் வால்மார்ட் நிறுவனத்தை ஆளும் வால்டன் குடும்பத்தின் சொத்துக்கள் ஒரே நாளில் 90,000 கோடி ரூபாய் அளவிலான இழப்பைச் சந்தித்துள்ளது.

இந்த மோசமான சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா..?

2 நாளில் 34 பில்லியன் டாலர் நஷ்டம்.. வால்மார்ட் வால்டன் குடும்பம் சோகம்

 வால்மார்ட் நிறுவனம்

வால்மார்ட் நிறுவனம்

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் பெண்டன்வில்லே பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வால்மார்ட் நிறுவனம், இந்த வருடம் ஒரு பங்கிற்காகச் சராசரி வருமானம் (adjusted earnings per share) 13 சதவீதம் வரையில் குறையும் என அறிவித்தது.

அமெரிக்க மக்கள்

அமெரிக்க மக்கள்

இந்த மோசமான சரிவுக்கு முக்கியக் காரணமாக அமெரிக்க மக்கள் விலைவாசி உயர்வால் அதிகப்படியான பணத்தைச் செலவு செய்வதைக் குறைத்துள்ளனர். அதாவது தேவைக்கான பொருட்களை மட்டுமே லிஸ்ட் போட்டு வாங்கும் காரணத்தால் வருமானத்தில் சரிவு ஏற்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

11.4 பில்லியன் டாலர்
 

11.4 பில்லியன் டாலர்

இந்த அறிவிப்பு வெளியான அடுத்தச் சில நிமிடங்களில் நியூயார்க் பங்குச்சந்தையில் இருக்கும் வால்மார்ட் நிறுவனப் பங்குகள் 7.6 சதவீதம் சரிந்த நிலையில், இந்நிறுவனத்தின் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் வால்டன் குடும்பம் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 11.4 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்தது.

 13 சதவீதமாக உயர்வு

13 சதவீதமாக உயர்வு

வால்மார்ட் பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் அதிகரிக்கத் துவங்கிய போது ஒரு பங்கிற்குக் கிடைக்கும் வருமானம் 1 சதவீதம் மட்டுமே குறையும் என அறிவித்தது. ஆனால் வெறும் 5 மாதத்தில் இதன் அளவீட்டை 13 சதவீதமாக உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

செலவளிக்கும் பழக்கம்

செலவளிக்கும் பழக்கம்

அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு அந்நாட்டு மக்களின் செலவழிக்கும் பழக்கத்தை எந்த அளவிற்கு மாற்றியுள்ளது என்பதைப் பார்க்கும் போது அந்நாட்டு பொருளாதார வல்லுனர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதேவேளையில் வால்மார்ட் பங்குகள் 2022ல மட்டும் சுமார் 15.67 சதவீதம் வரையில் சரிந்து ஒரு பங்கு 121.98 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 கனடா நாட்டின் Shopify

கனடா நாட்டின் Shopify

இதேவளையில் கனடா நாட்டின் ஈகாமர்ஸ் நிறுவனமான ஷாப்பிஃபை (Shopify) நிறுவனம் தனது விரிவாக்கத் திட்டங்கள் பலன் அளிக்காத நிலையில் செலவுகளைக் குறைக்கும் விதமாக 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் Shopify நிறுவன பங்குகள் சுமார் 14 சதவீதம் வரையில் சரிந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

World’s richest Walton family fortune fell $11.4 billion; After Walmart announced EPS will decline to 13 percent

World’s richest Walton family fortune fell $11.4 billion; After Walmart announced EPS will decline to 13 percent வால்மார்ட் குடும்பத்தைப் பதம் பார்த்த அமெரிக்க மக்கள்.. ஓரேநாளில் 11 பில்லியன் டாலர் மாயம்..!

Story first published: Wednesday, July 27, 2022, 11:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.