வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லடாக்: ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்வை கொண்டாடும் விதமாக இந்தோ – திபெத் பாதுகாப்பு படையினர் 12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றி, ஆக.,13 முதல் 15 வரை ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றிட வலியுறுத்தினர்.
நாட்டின் 75வது சுதந்திர தினம், ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்பது சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் மற்றும் அதன் மக்கள், கலாசாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடுவதற்கும், நினைவுகூறுவதற்கும் ஒரு முன்முயற்சியாகும். அதற்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கிடையே ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் ‘வீடு தோறும் மூவர்ணக்கொடி’ என்ற பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லடாக்கில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 12 ஆயிரம் அடி உயரத்தில் நமது மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி, ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ கொண்டாடினர். மேலும் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி, ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement