Google Maps Street View: கூகுள் இந்தியாவின் மெகா நிகழ்வு டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், கூகுள் மேப்ஸின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தின் வசதி ஆரம்பத்தில் நாட்டின் 10 நகரங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 50 நகரங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. கூகுள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வியூ வசதி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அம்சமாகும். நிறுவனம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேவையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது.
மோடியால் போன் விற்பனை ஜோர்; PLI திட்டத்தால் கிடைத்த பலன்!
கூகுள் ஸ்ட்ரீட் வியூ அம்சம் என்றால் என்ன? (What is Google Street View)
கூகுள் ஸ்ட்ரீட் வியூ என்பது ஒரு மேம்படுத்தப்பட்ட நிகழ்நேர டிஜிட்டல் வரைபட தொழில்நுட்பம். இது கூகுள் மேப்ஸ், கூகுள் எர்த் ஆப்ஸ் ஆகியவை மூலம் உலகெங்கிலும் உள்ள இடங்களின் காட்சிகளை தகவல்களுடன் வழங்குகிறது.
முன்னதாக இது முதன்முதலில் 2007ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பல நகரங்களில் தொடங்கப்பட்டது. அப்போதிருந்து, உலகெங்கிலும் உள்ள நகரங்கள், கிராமப்புறங்களில் இந்த சேவையை விரிவுபடுத்த கூகுள் திட்டமிட்டு வந்தது.
மேலதிக செய்தி:
5G Auction: வேற யாருக்கும் இந்த தைரியம் வரல; உயர்தர சேவை வழங்க 700 Mhz Band-இல் கைவைக்கும் ஜியோ!
சாலையின் புகைப்படம் கூகுள் மேப்ஸ்-இல் உள்ளது. அந்தச் சாலைகளில் ஒரு நீலக் கோடு தெரியும். சாலைகள் தவிர, உலக அடையாளங்கள், உணவகங்களுடன் அருங்காட்சியகங்களும் உள்ளன. இந்த தகவல்களை சாதாரண கூகுள் சேவை அளிப்பதில்லை.
Photo Credit: கூகுள்
புதிய ஸ்ட்ரீட் வியூ வசதியுடன் போக்குவரத்து சமிஞ்சைகளை கூட நாம் காண முடியும். இதனால் நம் திட்டமிடல் சரியாக இருக்கும். வெளியே பயணிக்கும் முன் சாலையில் நிலை குறித்த அனைத்து தகவல்களையும் கைபேசியில் தெரிந்துகொள்ளலாம்.
வெறும் ரூ.3,295 செலுத்தி iPhone 13 வாங்கலாம் – ஐபோன் 14 வருகையை முன்னிட்டு சலுகைகள் அறிவிப்பு!
பத்து நகரங்களுக்கு மட்டும் முதலில் சேவை
கூகுள் ஸ்ட்ரீட் வியூ வசதி தற்போது நாட்டில் 10 நகரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. இதில் சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாசிக், பரோடா, அகமதாபாத், பெங்களூர், ஹைதராபாத், அமிர்தசரஸ் ஆகிய 10 நகரங்கள் அடங்கும்.
இந்த 10 நகரங்களில் கிட்டத்தட்ட 150,000 கிலோ மீட்டர் சுற்றளவைக் கொண்டுள்ளதாக கூகுள் கூறியுள்ளது. இந்த அம்சம் 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் 50 நகரங்களில் செயல்பாட்டுக்கு வரும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதற்காக ஜெனிசிஸ் இன்டர்நேஷனல் (Genesys international), டெக் மஹிந்திராவுடன் (Tech Mahindra) ஆகிய நிறுவனங்களுடன் Google கூட்டு சேர்ந்துள்ளது.