Realme Smartwatch 3 Price: ரியல்மி நிறுவனம், அதன் மலிவு ஸ்மார்ட்வாட்சை Realme Pad X உடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் 3, புளூடூத் அழைப்பு வசதியுடன் வருகிறது. அனைத்து வசதிகளும் அடங்கிய ஒரு சிறந்த ஸ்மார்ட்வாட்ச் உங்களுக்கு வேண்டும் என்றால், இதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.
வாட்ச் வலுவான பேட்டரி ஆயுள் கொண்டது. மேலும், வாட்ச் ஐபி68 மதிப்பீடு கொண்டுள்ளது. பல அம்சங்கள் அடங்கியிருக்கும் புதிய ரியல்மி ஸ்மார்ட்வாட்சின் முழு விவரங்கள் மற்றும் சலுகைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
Realme Pad X 5G: புதிய ரியல்மி டேப்லெட் அறிமுகம் – அம்சங்கள் எல்லாம் டாப் டக்கர்!
ரியல்மி வாட்ச் 3 விலை (Realme Watch 3 Price)
புதிய ரியல்மி ஸ்மார்ட்வாட்சின் விலை 3,499 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அறிமுக சலுகையின் கீழ் வெறும் ரூ.2,999க்கு இதை நீங்கள் வாங்கலாம். இந்த வாட்ச் ஆகஸ்ட் 3 முதல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் ஆகியவற்றின் மூலம் விற்பனைக்கு வருகிறது.
ரியல்மி வாட்ச் 3 அம்சங்கள் (Realme Watch 3 Features)
ரியல்மி ஸ்மார்ட் கடிகாரத்தில் புளூடூத் அழைப்பு வசதியை பெறுவீர்கள். இதில் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் ஆகியவை உள்ளது. இந்த வாட்ச் 1.8 இன்ச் டிஎஃப்டி எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 240×286 பிக்சல்கள் கொண்டதாகும்.
மேலதிக செய்தி:
5G Auction: செல்போன் பயனர்களுக்கு நல்ல செய்தி – 5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது!
ரியல்மி வாட்ச் 3 சக்திவாய்ந்த பேட்டரியைக் கொண்டுள்ளது. கடிகாரத்தின் பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாள்களுக்கு நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த வாட்ச் 100க்கும் மேற்பட்ட வாட்ச் முகங்களையும் ஆதரிக்கிறது.
உங்கள் மொபைலில் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து, வாட்ச் முகத்தை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். உடற்பயிற்சிகளுக்காக 110க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி முறைகளையும் பெறுவீர்கள்.
மேலதிக செய்தி:
இந்த சியோமி, ரெட்மி போன்களுக்கு MIUI 14 ரெடி – முழு பட்டியலையும் காணுங்கள்!
மேலும், ஸ்மார்ட்வாட்ச் ஆனது தூசி மற்றும் தண்ணீருக்கு எதிரான பாதுகாப்பிற்காக IP68 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதய துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, உறக்கம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் சென்சார்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.