பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ திஸ்ஸ விதாரண நேற்று (27) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் வாக்கைப் பதிவுசெய்தில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கடிதம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நேற்று (27) இடம்பெற்ற வாக்கெடுப்பு தொடர்பாக பாராளுமன்ற இலத்திரனியல் வாக்கெடுப்புப் பதிவுகளுக்கு அமைய அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ திஸ்ஸ விதாரண வாக்கைப் பதிவு செய்திருக்கவில்லை.
இந்த வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ திஸ்ஸ விதாரண அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாக ஒரு சில ஊடகங்களில் வெளியானதால், செயலாளர் நாயகத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டதுக்கு அமைய இந்தக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்.