ஆதார் கார்டு என்பது இந்தியாவில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக அரசின் சலுகைகளை பெற ஆதார் அவசியமான ஒன்றாக உள்ளது. எனினும் இந்த சலுகைகளை பெற உங்களது ஆதாரில் உள்ள அனைத்து விவரங்களும் சரியானதாக இருக்க வேண்டும்.
ஆக ஆதாரினை பயன்படுத்த வேண்டுமெனில் அனைத்து விவரங்களும் சரியானதாக இருக்க வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால் உடனடியாக ஆதாரில் உள்ள விவரங்களை சரியாக அப்டேட் செய்ய வேண்டும்.
Aadhaar – PAN Linking: ஆதார் பான் கார்டு இணைப்பது எப்படி ? சில வழிகள் இதோ..!
ஆன்லைனில் அப்டேட் செய்யலாம்
குறிப்பாக ஆதாரில் உள்ள பெயரில் எதுவும் பிழையில்லாமல் இருக்க வேண்டும். முகவரி, பிறந்த தேதி என பல விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில், இதனை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணையத்திலேயே மாற்றிக் கொள்ளலாம். எனினும் புகைப்படம், மொபைல் நம்பரை பதிவு செய்ய, அருகிலுள்ள ஆதார் சேவை மையத்ததிற்கு தான் செல்ல வேண்டும்.
எத்தனை முறை மாற்றலாம்
இவ்வாறு மாற்றம் செய்யப்படுவதும் ஒரு சில முறையே அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் கார்டில் உள்ள பிறந்த தேதியினை ஒரு முறைக்கு மேல் அப்டேட் செய்ய முடியாது. அதேபோல ஆதார் கார்டில் உள்ள பெயரை இருமுறை அப்டேட் செய்யலாம். இதேபோல உங்களின் பாலினத்தினையும் உங்களின் பாலினத்தை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.
எத்தனை முறை மாற்றலாம்
இவ்வாறு மாற்றம் செய்யப்படுவதும் ஒரு சில முறையே அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் கார்டில் உள்ள பிறந்த தேதியினை ஒரு முறைக்கு மேல் அப்டேட் செய்ய முடியாது. அதேபோல ஆதார் கார்டில் உள்ள பெயரை இருமுறை அப்டேட் செய்யலாம். இதேபோல உங்களின் பாலினத்தினையும் உங்களின் பாலினத்தை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.
ஒரே மாதிரியாக இருக்கணும்
மத்திய அரசு ஆதார் பான் இணைப்பு மட்டும் இன்றி, வாக்காளர் அடையாள அட்டையுடனும் இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது. ஆக உங்களது ஆதாரில் உள்ள பிறந்த தேதி உள்பட பலவும், மற்ற ஆவணங்களில் உள்ளதை போல ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அப்போது தான் இணைப்பினை சரியாக செய்ய முடியும்.
எப்படி அப்டேட் செய்வது?
உங்கள் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை ஆன்லைனிலேயே அல்லது ஆதார் மையத்திலேயே சென்றும் அப்டேட் செய்து கொள்ளலாம். சில குறிப்பிட்ட விவரங்களை மட்டுமே ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம்.
இதில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட சில விவரங்களை மட்டும் ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம். மேற்கண்ட விவரங்கள் தவிர மற்ற விவரங்களை நேரில் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.
எப்படி ஆன்லைனில் அப்டேட் செய்வது?
ஆதார் அப்டேட் இணையத்திற்கு சென்று, proceed to Update என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அதற்கு அடுத்து 12 இலக்க ஆதார் நம்பரினை பதிவிட வேண்டும். அதன் பிறகு கேப்ட்சா எழுத்தினை பதிவிட வேண்டும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபியினை பதிவு செய்ய வேண்டும். இதனை ஆதார் மையத்திற்கும் சென்றும் உரிய ஆவணங்களை கொடுத்து அப்டேட் செய்திட வேண்டும்.
how to update mobile number in aadhaar online? check details
how to update mobile number in aadhaar online? check details/ஆதார் கார்டில் எப்படி பிறந்த தேதியை மாற்றுவது.. ஆன்லைனில் எப்படி?