இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ்கள் என்று கூறப்படும் பறக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
டீசல் பேருந்துகளை இயக்குவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து உள்ளதால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் விரைவில் பறக்கும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கும் நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களிலும் விரைவில் பறக்கும் பேருந்து வசதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் முதலீட்டை குறைத்ததும் இல்லை.. நிறுத்தியதும் இல்லை.. கெளதம் அதானி அதிரடி!
அமைச்சர் நிதின் கட்கரி
நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்கான வழிகளை ஆய்வு செய்து வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
ஸ்கை பஸ்கள்
இந்தியாவின் முதல் ஸ்கைபஸ் டெல்லி மற்றும் ஹரியானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இயக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் மாசுபாட்டுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி ஒரு நல்ல உத்தியாக இல்லாததால், காலநிலைக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கட்காரி தெரிவித்தார்.
டெல்லியில் ஸ்கை பஸ்
போக்குவரத்து மற்றும் மாசுபாட்டை குறைக்க முதல்கட்டமாக டெல்லியில் உள்ள தௌலா குவானிலிருந்து இருந்து மனேசருக்கு ஸ்கை பஸ்களை தொடங்க இருப்பதாகவும் பின்னர் அதை சோஹ்னா வரை நீட்டிக்க இருப்பதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். மேலும் இந்த திட்டம் வெற்றி பெற்றால் நாட்டின் அனைத்து பெருநகரங்களுக்கும் ஸ்கை பஸ்கள் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஸ்கைபஸ் என்றால் என்ன
ஸ்கைபஸ் என்பது ஒரு ரயில்வே அமைப்பாகும். இது மெட்ரோவைப் போலவே இருக்கும் என்றாலும் ஒரு உயரமான பாதையின் கீழ் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்திய தொழில்நுட்பவியலாளர் பி. ராஜாராம் வடிவமைத்த, ஸ்கைபஸ் அமைப்பு ஜெர்மனியில் உள்ள வுப்பர்டல் ஷ்வெபெபான் அல்லது எச்-பான் அமைப்புகளை போன்றது என கூறப்படுகிறது.
மணிக்கு 100 கிமீ வேகம்
ஸ்கைபஸ்களில் மணிக்கு சுமார் 100கிமீ வேகத்தில் பயணிக்கலாம் என்றும் இந்த பேருந்துகளை இயக்க மின்சார சக்தியைப் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. தௌலா குவானிலிருந்து மனேசர் வரையிலான தூரத்தை ஸ்கைபஸ்ஸில் 24 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்றும் இது மெட்ரோவை போல வெற்றி அடையும் ஒரு போக்குவரத்தாக இருக்கும் என்றும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
போக்குவரத்தில் எத்தனால்
இந்தியாவில் புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியை பூஜ்ஜியமாகக் குறைப்பதே தனது கனவு என்றும், நீரிலிருந்து பச்சை ஹைட்ரஜனை உருவாக்குவது அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும் கட்காரி தெரிவித்தார். எத்தனால் பொருளாதார ரீதியில் மலிவானது, மாசு இல்லாதது மற்றும் உள்நாட்டு உற்பத்தியாக இருப்பதால் போக்குவரத்து நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார். அரிசியில் இருந்து எத்தனால் தயாரிப்பதால், நாட்டில் விவசாய வளர்ச்சியை எத்தனால் அதிகரிக்கப் போகிறது என்றும் அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.
India may soon introduce skybuses on select routes says minister Nitin Gadkari
India may soon introduce skybuses on select routes says minister Nitin Gadkari | இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள்: சென்னைக்கு வருமா?