சீனா அனுப்பிய ராக்கெட்டின் விண்வெளி குப்பைகள் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்து இந்தியாவை தாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா அனுப்பிய லாங் மார்ச் 5 பி ராக்கெட்டின் பாகங்கள் பூமிக்கு அருகே சுற்றித் திரிவதாக அமெரிக்கா நிதி உதவி அளிக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வளிமண்டலத்திற்குள் ராக்கெட்டின் பாகங்கள் நுழைந்து அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளை தாக்கலாம் என ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.