வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இனிமேல் 17 வயதுக்கு மேற்பட்டவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டளிக்க முடியும் என்பது நடைமுறை. இதற்காக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க கோரி இந்திய தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பிக்கலாம். அதற்காக ஆதார், போட்டோ உள்ளிட்ட ஆவணங்களும் சமர்பிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் சார்பில் அதனை சரிபார்த்து பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டளிக்க முடியும்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான புதிய நடைமுறையை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்வதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். இதனால் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி 18 வயதை அடைந்திருக்க வேண்டும் என காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களின் 1ம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement