இலங்கை, பாகிஸ்தானை அடுத்து சிக்கலில் இன்னுமொரு அண்டை நாடு… மலைக்க வைக்கும் கடன்!

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பொருளாதார சிக்கலில் உள்ளன என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இலங்கை நாடு கிட்டத்தட்ட திவாலாகி விட்டது என்பதும் பாகிஸ்தான் கடனை அடைக்க சொந்த நாட்டின் சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் இன்னொரு அண்டை நாடும் பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும் மிகப்பெரிய கடனில் இருப்பதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நாடு வங்கதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார சிக்கலில் வங்கதேசம்

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானும் இலங்கையும் பொருளாதார சிக்கல் காரணமாக பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான வங்கதேசம் நிதி சிக்கலில் இருப்பதாகத் தெரிகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருவதாகவும், வங்கதேசம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) 4.5 பில்லியன் டாலர் கடனை கோரியுள்ளதாகவும் அந்நாட்டின் முன்னணி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 நிதி

நிதி

ஆடை ஏற்றுமதி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடான வங்கதேசம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை தவிர, அதன் கட்டணச் சமநிலை மற்றும் வரவு செலவுத் தேவைகளுக்கான நிதியை நாடியுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கதேச நிதியமைச்சர் ஏ.எச்.எம்.முஸ்தபா கமல், ஐ.எம்.எஃப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டாலரை பாதுகாக்கும் கொள்கை
 

டாலரை பாதுகாக்கும் கொள்கை

ஆடம்பர பொருட்கள், பழங்கள், தானியங்கள் அல்லாத உணவுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றின் இறக்குமதியை ஊக்குவிப்பதன் மூலம் டாலர்களைப் பாதுகாக்கும் கொள்கையை வங்கதேச வங்கி சமீபத்தில் அறிவித்தது.

அந்நிய செலாவணி

அந்நிய செலாவணி

மத்திய வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்பு 2022ஆம் ஆண்டு ஜூலை 20 நிலவரப்படி $39.67 பில்லியனாக குறைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு அந்நிய செல்வாணி கையிருப்பு $45.5 பில்லியனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச மத்திய வங்கி

வங்கதேச மத்திய வங்கி

கோவிட்-19 தொற்றுநோயால் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்ததாலும், அவர்களில் பலர் பயண இடையூறு காரணமாக வீடு திரும்ப முடியாமல் போனதாலும், வெளிநாட்டு வங்கதேசத்தினர்களின் பணம் ஜூன் மாதத்தில் 5% குறைந்து 1.84 பில்லியன் டாலராக இருந்தது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வங்கதேச டாக்கா மதிப்பு

வங்கதேச டாக்கா மதிப்பு

கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான வங்கதேச கரன்சி டாக்கா சுமார் 20% சரிந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். உள்ளூர் நாணயத்தின் தேய்மானம் நாட்டின் நிதிநிலையை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

சிக்கன நடவடிக்கை

சிக்கன நடவடிக்கை

வங்கதேசத்தின் மாநில திட்டமிடல் அமைச்சர் ஷம்சுல் ஆலம் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ‘வங்கதேச அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும், இறக்குமதி தடைகள் மற்றும் மேம்பாட்டு செலவினங்களில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

மின்தடைகள்

மின்தடைகள்

இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை எதிர்கொண்டதை போலவே, வங்கதேசமும் சமீப வாரங்களில் நீண்ட மின்தடைகளை சந்தித்துள்ளது. மின்வெட்டு சில நேரங்களில் ஒரு நாளைக்கு 13 மணிநேரம் வரை நீட்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் போதுமான டீசல் மற்றும் எரிவாயுவும் இல்லை. எனவே நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஏர் கண்டிஷனர்களை பயன்படுத்துவதை குறைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

வரலாறு காணாத வெள்ளம்

வரலாறு காணாத வெள்ளம்

வங்கதேச அரசாங்க மதிப்பீடுகளின்படி, வடகிழக்கில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், மில்லியன் கணக்கான மக்களின் வீடுகள் சேதம் அடைந்ததன் காரணமாக கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தியதால் வங்கதேச நிதி நிலைமையும் மோசமடைந்துள்ளது என கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

After Sri Lanka and Pakistan, Another Neighbouring Country in Trouble? Bangladesh Seeks $4.5 Billion IMF Loan

After Sri Lanka and Pakistan, Another Neighbouring Country in Trouble? Bangladesh Seeks $4.5 Billion IMF Loan | இலங்கை, பாகிஸ்தானை அடுத்து சிக்கலில் இன்னுமொரு அண்டை நாடு… மலைக்க வைக்கும் கடன்!

Story first published: Thursday, July 28, 2022, 10:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.