எஸ்பிஐ கார்டு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது ஜூன் காலாண்டில் 105.80% அதிகரித்து, 626.91 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே கடந்த ஆண்டில் 304.61 கோடி ரூபாயாக லாபம் இருந்தது. இதே கடந்த காலாண்டில் 580.65 கோடி ரூபாயாக உள்ளது.
இதே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் விகிதமானது முதல் காலாண்டில் 3,100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 31% அதிகரித்தும், கடந்த காலாண்டினை காட்டிலும் 9%ம் அதிகரித்துள்ளது.
பணம் எடுக்கும் விதிமுறைகள் மாற்றம்.. SBI ஏடிஎம் வைத்திருப்போர் இதை தெரிந்து கொள்ளுங்க!
வட்டி வருவாய்
வட்டி வருவாய் விகிதமானது முதல் காலாண்டில் 20% அதிகரித்து, 1387 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 10% அதிகரித்துள்ளது. வட்டி செலவினங்களுக்கு முன்பு வருவாய் விகிதம் 22% அதிகரித்து, 1291 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் 1056 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த 4ம் காலாண்டில் 1172 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செலவு அதிகரிப்பு
2023ம் நிதியாண்டில் முதல் காலாண்டில் எஸ்பிஐ-ன் கார்டு இன் ஃபோர்ஸ் 19% அதிகரித்து, 1.43 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1.20 கோடி ரூபாயாக இருந்தது. செலவினங்களும் 79% அதிகரித்து, 59,671 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 33,260 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மொத்த இருப்பு நிலை
ஜுன் காலாண்டில் மொத்த செயல்படாத சொத்தின் மதிப்பானது 2.21% ஆக பதிவு செய்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 3.91% ஆக இருந்தது. இதே நிகர செயல்படாத சொத்துகள் 0.79% ஆக இருந்தது.
ஜூன் காலாண்டில் எஸ்பிஐ கார்டின் மொத்த இருப்பு நிலை 36,859 கோடி ரூபாயாக இருந்தது. இதே மார்ச் காலாண்டில் 34,648 கோடி ரூபாயாக இருந்தது.
கிரெடிட் கார்டு முன் பணம்
ஜூன் 30, 2022 நிலவரப்படி, மொத்த முன்பணங்கள் (கிரெடிட் கார்டு பெறத்தக்கவை) 33,215 கோடி ரூபாயாக இருந்தது. இதே மார்ச் காலாண்டில் 31,281 கோடி ரூபாயாக இருந்தது. ஜூன் காலாண்டில் இதன் நிகர மதிப்பு 8445 கோடி ரூபாயாக இருந்தது. இதே மார்ச் காலாண்டில் 7824 கோடி ரூபாயாக இருந்தது.
SBI card announced net profit rises 106% to Rs.627 crore
SBI card announced net profit rises 106% to Rs.627 crore/எகிறிய எஸ்பிஐ கார்டு லாபம்.. வாராக்கடன் விகிதமும் சரிவு.. !