ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் வைத்து மாணவரை மசாஜ் செய்ய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிளா சிங். இவர் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விடச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அந்த மாணவன், நாற்காலியில் ஆசுவாசமாக அமர்ந்திருந்த ஆசிரியைக்கு மசாஜ் செய்கிறார். அப்போது, வகுப்பறையில் மற்ற மாணவ மாணவியரும் அமர்ந்து உள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து ஆசிரியை ஊர்மிளா சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவ்விவகாரம் குறித்து ஆசிரியை ஊர்மிளா சிங்கிடம் தொடக்கக் கல்வித் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: கணவருடன் கடலுக்கு சென்று காதலருடன் மாயமான மனைவி: மீட்பு பணியால் நொந்துப்போன போலீஸ்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM