வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
கடமைமையைச் செய்து கொண்டிருந்தது போக்குவரத்துக் காவல் துறை…
ஹெல்மெட் இல்லாமல் பயணித்தவரை ஒலிம்பிக் ஓட்டத்தில் தடுத்து நிறுத்தி அபராதம் போட்டுக் கொண்டிருந்தது. நின்றிருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. அவ்வப்போது மணி பார்ப்பதும் திறன்பேசியில் தொடர்பு கொள்வதுமாக நின்று கொண்டிருந்தனர்.
நாடே வியக்கும் வகையில் அப்போது காவல்துறையினர் கடமை அனைவரையும் அதிரச் செய்தது.
ஆம்…. சைக்கிளில் வந்த 15 வயது பையனும் தடுத்து நிறுத்தப்பட்டான். ஏனோ அவன் முகம் சற்றுக் கூடுதலானக் கலவரத்தோடு இருந்தது. அவன் சைக்கிளைப் பூட்டிக் காவல்துறை தன் கடமையைச் செய்த நிறைவோடு அடுத்த வாகனத்தை நிறுத்தியது. பையன் கெஞ்ச ஆரம்பித்தான். காவலர் கடுமை காட்டினார். அழுது பார்த்தான். ஆனாலும் அங்கிருந்து சைக்கிளோடு நகர இயலவில்லை.
பொறுத்துப் பார்த்துப் பொறுமை இழந்த பையன் “சரி சார் நான் கிளம்பறேன். போசொல்ல இந்த சைக்கிள வூட்டுக்கு எத்துன் போ”… என்று சொல்லி அசால்ட்டா கிளம்ப ஆரம்பித்தான்.
கோபத்தின் உச்சிக்குப் போனக் காவலர் காலரைப் பிடித்து இழுத்து “ஏண்டா உனக்கு அவ்ளோ திமிரா? உங்க அப்பா போன் நம்பர் சொல்லு. அவர் வரட்டும் பேசிக்கிறேன். இல்லைன்னா சைக்கிள ஸ்டேஷன்ல வந்து எடுத்துக்க” என்றார்.
“ஐயே! எனக்கு இன்னாத்துக்கு சார் இந்த சைக்கிளு???”
“ஏண்டா அப்போ உன் சைக்கிளு உனக்கு வேணாமா?”
“இன்னாது என் சைக்கிளா? சார் இது உங்க வூட்டு சைக்கிள் சார். வீட்டம்மா கறிவேப்பிலை கொத்துமல்லி வாங்க என்னாண்ட குடுத்து வுட்டுச்சி. இன்னா போலீசோ நீ உன் வூட்டு சைக்கிளே உனுக்கு அடையாளம் தெர்ல”.
காலரைப் பிடித்திருந்த கைகள் தளர்ந்தன. பையன் அவன் வழியில் சென்றான்.
-கபில பாலா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.