பெங்களுர்; கடந்த 5 நாட்களில் 3 காட்டு யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கின்றன. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் இரையை தேடி வரக்கூடிய காட்டு யானைகள் மின் வேலியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 5 நாட்களில் மட்டும் 3 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்மாபேட்டை தாலுகா பஞ்சப்பள்ளி பகுதியில் இரை தேடி வனப்பகுதியில் இருந்து கிராமப்பகுதிக்கு வந்த 25 வயது பெண் யானை ஒன்று காப்பி தோட்டத்திற்கு சென்றுள்ளது. அங்கு காப்பி தோட்டத்தில் பாதுகாப்பிற்காக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஒரு மின்கம்பத்தில் உள்ள மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்துள்ளது. இரையை தேடி வந்த காட்டு யானையானது அந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த யானையை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியபோது யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. எனவே யானையை அந்த பகுதியிலேயே புதைக்கப்பட்டது. குறிப்பாக 2 நாட்களுக்கு முன்பு கூட 2 காட்டு யானைகள் அதேப்போல் மின்கம்பியை மிதித்து உயிரிழந்த நிலையில் தற்போது ஒரு காட்டு யானையானது மின்கம்பியை மிதித்து உயிரிழந்துள்ளது. எனவே குடகு மாவட்டத்தை பொறுத்த வரையில் அதிக அளவிலான வனப்பகுதிகள் நிறைந்த ஒரு பகுதியாகவும், இந்த பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் மற்றும் வன விலங்குகள் உள்ளது. கடந்த 5 நாட்களில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் மின்கம்பியியை மிதித்து உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.