கியூட்னஸ் பாதி, கெத்து பாதி : ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோஸ்
தமிழ் நடிகையான ரம்யா பாண்டியன் சின்னத்திரையின் பிக்பாஸ் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழடைந்தார். ரம்யா பாண்டியன் திறமையான நடிகையாக இருந்தாலும் முன்னணி நடிகைகள் பட்டியலில் இதுவரை இடம்பிடிக்கவில்லை. எனினும், சமூகவலைதளங்கள் என்று வந்துவிட்டால் ரம்யா பாண்டியன் தான் 'குயின்'. அந்த அளவுக்கு அவரது போட்டோஷூட்களுக்கு ரசிகர்கள் உள்ளனர். டிரெடிஷனல், க்ளாமர், மாடர்ன் என எந்தவொரு போட்டோஷூட்டிலும் ரம்யாவின் அழகை ரசிக்கவே பலரும் அவரது புரொபைலை மொய்த்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற கோட் அணிந்து கெத்தாக போஸ் கொடுத்திருக்கும் ரம்யாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.