மதுரை: செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் படங்கள் இடம்பெற வேண்டும். ஜனாதிபதி, பிரதமர் படங்கள் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி , பிரதமர் பட விளம்பரம் சேதப்படுத்தப்பட்டால் அதில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்துள்ளது.