செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று சர்வதேச செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
The Government of Tamil Nadu is doing an exceptional job promoting the #ChessOlympiad.
Today we could see an ad on the front page of all major newspapers in the country welcoming the players to the opening ceremony. pic.twitter.com/gHHTd0BNTW
— International Chess Federation (@FIDE_chess) July 28, 2022
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை துவக்க விழா நடைபெற உள்ள நிலையில் சர்வதேச செஸ் சம்மேளனத்தின் இந்த பதிவு தமிழக அரசை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள செஸ் சம்மேளனம், “இன்று நடைபெற இருக்கும் துவக்க விழா குறித்தும் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த முன்னணி நாளிதழ்கள் அனைத்திலும் தேசிய அளவில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து செஸ் விளையாட்டை தமிழ்நாடு அரசு இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
Thank you.
Best wishes for #ChessOlympiad https://t.co/kXWG1gPRyO
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 28, 2022
சர்வதேச செஸ் சம்மேளனத்தின் இந்த பதிவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.