சோமேட்டோ விலை குறையும் என முன்கூட்டியே கணித்தது எப்படி.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பார்வை?

சோமேட்டோ பங்கு விலையானது அதன் ஆல் டைம் உச்சத்தில் இருந்து தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

கடந்த ஆண்டு நவம்பர் 2021ன் நடுப்பகுதியில் சோமேட்டோ பங்கின் விலை அதன் ஆல் டைம் உச்சமான 169 ரூபாயினை எட்டியது. இதற்கிடையில் கடந்த வாரத்தில் அதன் முதலீட்டாளர்களின் லாக் இன் காலம் முடிவடைந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன.

ராகேஷ் ஜுன் ஜுன்வாலா கணிப்பு

இந்த சரிவினை கடந்த 2021ம் ஆண்டிலேயே ராகேஷ் ஜுன் ஜுன்வாலா கணித்திருந்தார், இப்பங்கின் விலையானது அதன் உச்சத்தில் இருந்து சரிவடையலாம் என கணித்திருந்தார். இது குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்திலும் வைரலாக பரவி வருகின்றது.

முட்டாள் என கூறுவார்கள்

முட்டாள் என கூறுவார்கள்

இந்தியா டுடே மாநாட்டில் பேசிய ராகேஷ் ஜுன் ஜுன்வாலா சோமேட்டோ பங்கு தாரர்களை எச்சரித்துள்ளார். மேலும் சந்தையில் அதிகப்படியானவை சரி செய்யும் நேரம் வரும். சோமேட்டோ பங்கினை வாங்க வேண்டாம் என்று கூறினால் மக்கள் என்னை முட்டாள் என கூறுவார்கள் என கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

அப்போது விலை என்ன?
 

அப்போது விலை என்ன?

அந்த வீடியோ வெளியானது அக்டோபர் 8, 2021 ஆகும். அப்போது அப்பங்கின் விலை 136 ரூபாயாகும். இன்று அதன் விலை 45 ரூபாய் என்ற லெவலில் உள்ளது.

இன்று விலை என்ன?

இன்று விலை என்ன?

இன்று என் எஸ் இ-யில் சோமேட்டோ பங்கின் விலையானது 4.32% அதிகரித்து, 45.85 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்சம் 46.30 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 43.05 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 169 ரூபாயாகும், இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 40.60 ரூபாயாகும்.

இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 4.55% அதிகரித்து, 45.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்சம் 46.35 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 43.05 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 169.10 ரூபாயாகும், இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 40.55 ரூபாயாகும்.

 ஷங்கர் சர்மாவின் கருத்து

ஷங்கர் சர்மாவின் கருத்து

ராகேஷ் ஜுன் ஜுன்வாலா போல, மற்றொரு முன்னணி முதலீட்டாளரும் ஆன ஷங்கர் ஷர்மாவும் இவ்வளவு அதிக மதிப்பீட்டில் பங்குகள் பட்டியலிடப்பட்டதில் அதன் ஆட்டம் முடிந்துவிட்டதாக கூறியுள்ளார்.

சோமேட்டோ பங்கு விலையானது பங்கு வெளியீட்டின் போது 72 – 76 ரூபாயாக வெளியிடப்பட்டது. இது கடந்த ஜூலை 23, 2021ல் பட்டியலிடப்பட்டது. அது 51% பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டது. இது கடந்த ஆண்டு நவம்பரில் 169 ரூபாய் என்ற லெவலையும் எட்டியது. எனினும் அதன் பிறகு சரிய தொடங்கிய பங்கானது, தொடர்ந்து சரிவு பாதையிலேயே காணப்படுகின்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How Rakesh jhunjhunwala predicted zomato share crash last year?

How Rakesh jhunjhunwala predicted zomato share crash last year?/சோமேட்டோ விலை குறையும் என முன்கூட்டியே கணித்தது எப்படி.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பார்வை?

Story first published: Thursday, July 28, 2022, 16:11 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.