புதுடெல்லி: கர்நாடகாவில் பாஜ இளைஞர் பிரிவு நிர்வாகி பிரவீன் நெட்டாரை நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள். இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று அளித்த பேட்டியில், ‘கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான அரசு குற்றவாளிகளை பாதுகாப்பதை விடுத்து, அவர்களை அடையாளம் காணவும், கைது செய்வதற்கும் கர்நாடக போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும். தீவிரவாத சக்திகளுக்கு கேரளா புகலிடமாக மாறியுள்ளது. அரசியல் பாதுகாப்பு காரணமாக இதுபோன்று சம்பவங்கள் நிகழ்கின்றன,’ என்று தெரிவித்தார்.